டுக் டுக் சுற்றுலா
டுக் டுக் சுற்றுலா கொழும்பில் 3 – 4 மணிநேரத்தில் சுற்றுப்பயணம் வேடிக்கையாகவும் விரைவாகவும் சுற்றுலா செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சுற்றுலாவாகும். இது உங்களுக்கு உண்மையான, கொழும்பு நகரின் அமைப்பு மற்றும் அழகையும் தோற்றத்தைக் காட்டக்கூடியது. கொழும்பு நகர டுக் டுக் சுற்றுலா சுமார் காலை 9.30 மணிக்குத் தொடங்கி மாலை 3.30 மணிக்கு முடிவடையும்.
Description
டுக் டுக் சுற்றுலா கொழும்பில் வேடிக்கையாகவும் விரைவாகவும் சுற்றுலா செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சுற்றுலாவாகும். இது சில மணிநேரங்களில் ஒரு சாகச உணர்வைத் தரக்கூடியது. இந்த 3 – 4 மணிநேர சுற்றுப்பயணம் உங்களுக்கு உண்மையான, உள்ளூர், கொழும்பு நகரின் அமைப்பு மற்றும் நாட்டின் அழகையும் தோற்றத்தைக் காட்டக்கூடியது. நீங்கள் கொழும்பையும் இலங்கையையும் வெவ்வேறு வழிகளில் அனுபவிக்கலாம். இது வேடிக்கையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். முக்கியமாக இந்த சுற்றுப்பயணம் கொழும்பை அடிப்படையாகக் கொண்டதாயினும், பொதுவாக, டுக் டுக் உங்களை தீவின் அனைத்து இடங்களுக்கும் விரைவாக அழைத்துச் செல்லக்கூடியது. இச்சுற்றுலா இலங்கையின் பிற முக்கிய மையங்களிலும் இயக்குகிறது. கொழும்பு டுக் டுக் சுற்றுப்பயணத்திற்கான விவரங்கள் இங்கே:
கொழும்பு நகர டுக் டுக் சுற்றுலா காலை 9.30 மணிக்குத் தொடங்கி மாலை 3.30 மணிக்கு முடிவடையும்.
கொழும்பிற்கான சமீபத்திய பயணத் திட்டம் (பருவகால மாற்றங்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது):
- உங்கள் தங்குவிடுதியில் இருந்து அழைத்துச் செல்லல்
- கங்காராமயா பௌத்த கோவில்
- சுதந்திர நினைவு சதுக்கம்
- கேப்டன் தோட்ட இந்துக் கோவில்
- பெட்டா சந்தை வீதிகள் (வாடிக்கையாளர்கள் விரும்பும் 2வது குறுக்குத் தெரு)
- இலங்கை பலரக பழக்கடை
- பழைய இடச்சு மருத்துவமனை
- கோப்பி, மசாலா சந்தை
- காலிமுகத்திடல் கடற்கரையில் குறுகிய நடைப்பயணமும் சில உள்ளூர் உணவுகளை உருசித்தலும்
- இலங்கைத் தேநீர் உருசிக்கும் அனுபவம்
- இலங்கைச் சுவையில் மதிய உணவு (காலை நகரச் சுற்றுலா, கப்பல் சுற்றுலாக்களில் மட்டும்)
- மயூரா உணவகத்தில் இலங்கை இரவு உணவு (சூரிய அஸ்தமன நகர சுற்றுலாவில் மட்டும்)
தங்குவிடுதி அல்லது விருந்தினர்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தில் இறக்கிவிடுதல்
Reviews
There are no reviews yet.