இலங்கை ஒரு நாள் சுற்றுலா

கொழும்பிலிருந்து பயணம் செய்து, இலங்கையின் மிக முக்கியமான ஒரு இடத்தை விரைவாக அனுபவிக்க ஒரு நாள் சுற்றுலா உங்களுக்கு உதவுகிறது. உங்களுக்கு ஐந்தில் ஒரு விருப்பத் தெரிவு உள்ளது. ஒன்றைத் தெரிந்து, விரைவாக ஒரு இடத்தின் சுற்றுலாவில் மகிழலாம்.

Description

Description

இலங்கையில் சில குறிப்பிட்ட இடங்களைத் தவறவிட்டவர்களுக்கு ஒரு நாள் சுற்றுலா ஒரு சிறந்த தேர்வாகும். மேலும், குறுகிய காலத்திற்கு கொழும்புக்குச் செல்பவர்களுக்கு அல்லது கொழும்பு அல்லது கட்டுநாயக்க விமான நிலையத்தில் சில நாட்கள் தங்குபவர்களுக்கு இது நல்லது. நீங்கள் இடை வழி விமானத்திற்காகக் காத்திருந்தால் அல்லது கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்தைப் பார்வையிட்டால், இந்த ஒரு நாள் சுற்றுலா உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஒரு நாளுக்குள், நீங்கள் இலங்கையில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பார்வையிட்டு உங்கள் இடத்திற்குத் திரும்பலாம்.

உங்களுக்கு ஐந்தில் ஒரு விருப்பத் தெரிவு உள்ளது:

1. தம்புள்ள பொற்கோயில்

கொழும்பிலிருந்து 148 கி.மீ தொலைவில் தம்புள்ள அமைந்துள்ளது. இலங்கையில் உள்ள உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றான தம்புள்ள குகைக் கோயில் முக்கிய சுற்றுலாத் தலமாகும். 80 இற்கும் மேற்பட்ட ஆவணப்படுத்தப்பட்ட குகைகள் உள்ளன. அவற்றில் சில, சிலைகளையும் ஓவியங்களையும் கொண்டுள்ளன.

2. சிகிரியா, உலக பாரம்பரிய தளம்

சிகிரியா ஒரு பழங்கால பாறை கோட்டை ஆகும். இந்த பாறையின் உச்சியில் அரண்மனை இருந்தது. அதன் சில இடங்கள் வண்ணமயமான ஓவியங்களால் அலங்கரித்து காணப்பட்டது. இந்த பாறையின் பக்கவாட்டில், மேலே ஒரு சிறிய பீடபூமியில், நுழைவாயிலாக சிங்கத்தின் முன்கை வடிவத்தைக் காணலாம்.

3. கண்டி – பின்னவலை, பேராதனை, கண்டி

பின்னவலை, பேராதனை, கண்டி ஆகிய இடங்களை ஒரு நாள் சுற்றுப்பயணத்தில் பார்வையிடலாம். பின்னவலை என்பது அனாதை யானைகளுக்கான இல்லமாகும். பேராதனை தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகையான பூக்கள் மற்றும் தாவரங்கள் உள்ளன. கண்டியில் உள்ள தலதா மாளிகை (புத்தரின் புனிதப் பல் ஆலயம்) பிரபலமான வழிபாட்டுத் தலமாகும்.

4. பெந்தோட்டை, கடற்கரையும் ஆறும்

பெந்தோட்டை கொழும்பிலிருந்து 64 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நீங்கள் இரசிக்கக்கூடிய அமைதியான கடற்கரைகளில் இதுவும் ஒரு பிரபலமான இடமாகும். மேலும், நீங்கள் நதி சுற்றுலாவை அனுபவிக்கலாம். சதுப்புநில காடுகள் சூழ்ந்த நதியை சிறு படகு வழியாக மிதந்து சென்று, சில விலங்குகள் மற்றும் பறவைகளைப் பார்க்கும்போது இது சுவாரஸ்யமாக இருக்கும்.

5. கிதுல்கலை, சாகசங்களும் வேடிக்கையும்

கிதுல்கலை சறுக்குப்படகு, நீர்சறுக்குதல், நீர் வீழ்ச்சி ஊந்தி இழுத்தல், வான்வழி கயிறு போன்ற சாகசங்களுக்கு ஏற்ற இடமாகும். இது கொழும்பிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நீங்கள் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு செயல்பாடுகளை அனுபவிக்க முடியும். கிதுல்கலையில், நீங்கள் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பொருட்களைப் பெறலாம்.

குறிப்பு:
இந்த சுற்றுலாவில் வழிகாட்டி (ஓட்டுநர்), தூய நீர், அச்சிடப்பட்ட குறிப்புகள் ஆகியவை உள்ளடக்கப்படுகின்றன. நுழைவு கட்டணம், ஒளிப்பட, காணொளி கட்டணங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை.(இந்த சுற்றுலா குறைந்தபட்சம் 2 பயணிகளுக்கானது. இது பருவகால மாற்றங்களுக்கு உட்பட்டதும் நிபந்தனைகள் உட்பட்டதுமாகும்.)

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “இலங்கை ஒரு நாள் சுற்றுலா”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன