சமயச் சுற்றுலா
வெவ்வேறு சமய நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு, அச்சமயம் தொடர்பான கட்டிடக்கலைகளை ஆராயுங்கள். நீங்கள் மத ஆர்வலராக இருந்தாலோ அல்லது கட்டிடக்கலை ஆர்வலராக இருந்தாலோ அல்லது ஒளிப்படப் பிரியராக இருந்தாலோ, இச் சுற்றுலா ஒரு அழகான சுற்றுலாவாக இருக்கும்.
Description
கொழும்பு நகரில் கணிசமான எண்ணிக்கையிலான சமய ரீதியான கட்டிடங்கள் அல்லது வழிபாட்டு மையங்கள் உள்ளன. இலங்கை மக்கள் பௌத்தம், இந்து மதம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களைப் பின்பற்றுகிறார்கள். கொழும்பின் முக்கியத்துவத்தின் காரணமாக, கொழும்பில் இந்த நான்கு மதங்களின் இருப்பு அதிகமாக உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை வரலாற்று மதிப்புகளைக் கொண்டுள்ளன.
ஆகவே, இச்சுற்றுலா ஒவ்வொரு மதத்திற்கும் என தனித்தனியான சுற்றுப்பயணத்தை உங்களுக்கு வழங்குகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மதங்கள் தொடர்பான இடங்களை நீங்கள் காண விரும்பினால், நாங்கள் உங்களுக்கு அவ்வாறான ஏற்பாட்டைச் செய்து தரலாம்.
சமயச் சுற்றுலா பின்வருவனவற்றில் ஒன்றாக அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கலாம்:
- கொழும்பு பௌத்த சமய சுற்றுப்பயணம்
- கொழும்பு இந்து சமய சுற்றுப்பயணம்
- கொழும்பு இஸ்லாமிய சமய சுற்றுப்பயணம்
- கொழும்பு கிறிஸ்தவ சமய சுற்றுப்பயணம்
Reviews
There are no reviews yet.