இராமாயணச் சுற்றுலா

இராமாயண சுற்றுப்பயணம் என்பது இலங்கையில் இராமாயணத்தின் இதிகாசக் கதையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மத, கலாச்சார மற்றும் தொல்பொருள் சுற்றுலாவாகும். இதில் நீங்கள் இராமாயணம் நடந்த இடங்களை அனுபவிக்க முடியும். இராமாயணத்தின்படி, இலங்கை அரசன் இராவணன் இராமரின் மனைவி சீதையைக் கடத்திச் சென்றார். அதனால், இராமரும் அவரது கூட்டாளியும் இந்தியாவில் இருந்து இலங்கையை நோக்கிச் சென்றனர். இறுதியாக, இராமர் தனது மனைவியை மீட்டு நாடு திரும்பினார்.

இலங்கை ஒரு நாள் சுற்றுலா

கொழும்பிலிருந்து பயணம் செய்து, இலங்கையின் மிக முக்கியமான ஒரு இடத்தை விரைவாக அனுபவிக்க ஒரு நாள் சுற்றுலா உங்களுக்கு உதவுகிறது. உங்களுக்கு ஐந்தில் ஒரு விருப்பத் தெரிவு உள்ளது. ஒன்றைத் தெரிந்து, விரைவாக ஒரு இடத்தின் சுற்றுலாவில் மகிழலாம்.

இலங்கையை ஆராயுங்கள்

10 பகல் மற்றும் 9 இரவுகள் கொண்ட இலங்கையை ஆராயுங்கள் என்னும் சுற்றுலா மூலம் இலங்கையின் கலாச்சார அனுபவத்தை நீங்கள் பெறலாம். இச்சுற்றுலா மூலம் இலங்கையின் பல பகுதிகளை நீங்கள் கண்டுகளிக்கலாம்.

கொழும்பு நகரச் சுற்றுலா

கொழும்பு நகர சுற்றுப்பயணத்தில் கொழும்பு கலங்கரை விளக்கம், காலி முகத்திடல், யோர்க் தெரு (பிரித்தானிய காலனித்துவ கட்டிடக்கலை), கொம்பனித் தெரு பகுதி, பெய்ரா ஏரி, உலகப் போர் நினைவுச்சின்னம், பொது நூலகம், தேசிய அருங்காட்சியகம், தாமரைத் தடாக அரங்கு, விஹார மகாதேவிப் பூங்கா, கொழும்பு நகர மண்டபம் மற்றும் பல முக்கிய இடங்களைப் பார்வையிடலாம்.

கொழும்பு ஜீப் சுற்றுலா

இரண்டாம் உலக யுத்த கால அல்லது வியட்நாம் யுத்த கால ஜீப் இரக வாகனத்தில் கொழும்பு நகரைச் சுற்றிப் பார்க்கலாம். சுமார் 20 சுற்றுலா தலங்களையும் தொல்பொருள் தளங்களையும் நீங்கள் 3 மணி நேரத்தில் சுமார் 30-40 கி.மீ பயணம் செய்து பார்வையிடலாம். திறந்தவெளி வாகன அமைப்பு கொழும்பு நகரின் 360 பாகை காட்சியை உங்களுக்கு வழங்கி, ஒளிப்படம் எடுப்பதற்கும் காணொளி எடுப்பதற்கும் சிறந்த சந்தர்ப்பத்தை வழங்குகிறது.

சமயச் சுற்றுலா

வெவ்வேறு சமய நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு, அச்சமயம் தொடர்பான கட்டிடக்கலைகளை ஆராயுங்கள். நீங்கள் மத ஆர்வலராக இருந்தாலோ அல்லது கட்டிடக்கலை ஆர்வலராக இருந்தாலோ அல்லது ஒளிப்படப் பிரியராக இருந்தாலோ, இச் சுற்றுலா ஒரு அழகான சுற்றுலாவாக இருக்கும்.

டுக் டுக் சுற்றுலா

டுக் டுக் சுற்றுலா கொழும்பில் 3 - 4 மணிநேரத்தில் சுற்றுப்பயணம் வேடிக்கையாகவும் விரைவாகவும் சுற்றுலா செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சுற்றுலாவாகும். இது உங்களுக்கு உண்மையான, கொழும்பு நகரின் அமைப்பு மற்றும் அழகையும் தோற்றத்தைக் காட்டக்கூடியது. கொழும்பு நகர டுக் டுக் சுற்றுலா சுமார் காலை 9.30 மணிக்குத் தொடங்கி மாலை 3.30 மணிக்கு முடிவடையும்.