குறிப்பு

குறைந்த செலவில் கொழும்புச் சுற்றுலா உதவிக்குறிப்புகள்

Exploring Colombo

இலங்கையின் துடிப்பான தலைநகரான கொழும்பு காலனித்துவ வசீகரம், எப்போதும் இயக்கமான தெருக்கள், வெப்பமண்டல கடற்கரை போன்றவற்றின் கண்கவர் கலவையாகும். ஆடம்பர சுற்றுலா எளிது என்றாலும், எங்கு போக வேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்தால்இ கொழும்பு சுற்றுலா செல்பவர்களின் சொர்க்கமாகவும் இருக்கும். நீங்கள் தனியாகப் பயணிப்பவராக இருந்தாலும், குழுவாக இருந்தாலும் சரி, அல்லது குறைந்த செலவில் கவனம் செலுத்துபவராக இருந்தாலும் சரி, கொழும்பை எப்படி குறைந்த செலவில் சுற்றிப்பார்க்கலாம் என்பது இங்கே நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

மலிவான தங்குமிடங்கள்

கொழும்பில் சுற்றுலாவை அனுபவிக்க ஐந்து நட்சத்திர விடுதிகளில் நீங்கள் தேடத்தேவையில்லை. நகரம் பலவிதமான விலைக்கு ஏற்ற தங்குமிடங்களை வழங்குகிறது:

தங்கு விடுதிகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள்: நட்சத்திர தரமற்ற, ஆனால் நல்ல விருந்தினர் இல்லங்களை முயற்சிக்கவும். இந்த இடங்களில் சுத்தமான தங்குமிடங்கள், உணவு போன்ற கிடைக்கும்.

தனி அறைகள்: உள்ளூர் வீட்டில் உள்ள ஒரு தனியார் அறை மிகவும் உண்மையான அனுபவத்தை அளிக்கிறது. மேலும் அது பொதுவாக ஒரு நட்சத்திர விடுதியைவிட குறைவான விலையில் கிடைக்கும்.

மலிவான (சுவையான) உணவுகள்

உணவுப் பிரியர்களின் புகலிடமாக கொழும்பு உள்ளது. அதிர்ஷ்டவசமாக, சிறந்த உணவு பெரும்பாலும் மலிவானது!

தெரு உணவு: இறால் வடை (இறால் பொரியல்), நண்டு வடை, கொத்டு ரொட்டி, மற்றும் சாலையோர உணவுக் கடைகள் அல்லது காலி முகத்திடலைப் போன்ற உள்ளூர் உணவு கிடைக்கும் இடங்களில் மாலையில் சாப்பிடுங்கள்.

உள்ளூர் உணவகங்கள்: சிறு உணவகங்களில், உள்ளூர் மக்கள் சாப்பிடும் இடத்தில் சாப்பிடலாம்.

நொறுக்கு தீனி: இவை சமோசா, பட்ரிஸ், பேஸ்ட்ரி மற்றும் ரோல்ஸ் போன்ற உள்ளூர் தின்பண்டங்கள் குறைந்த விலையில் கிடைக்கும்.

உள்ளூர்ப் பயணம்

நீங்கள் தனியார் வாகனங்களைத் தவிர்த்தால் கொழும்பில் போக்குவரத்து மிகவும் மலிவானது:

முச்சக்கர வண்டி: நியாயமான விலைகளைப் பெறவும் பேரம் பேசுவதைத் தவிர்க்கவும் பிக்மி (PickMe) அல்லது ஊபர் (Uber) போன்றவற்றைப் பயன்படுத்தவும்.

பொதுப் பேருந்துகள்: வசதி குறைவானாலும் மலிவானது. கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும், அவை உள்ளூர் மக்களுடன் பயணிக்கும் புது ஒரு அனுபவத்தின் பகுதியாகும்!

இரயில் பயணங்கள்: கொழும்பு கோட்டையில் இருந்து கல்கிசை வரை இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை இரயில் பயணத்தை மேற்கொள்ளுங்கள்.

இலவச / குறைந்த விலை

கொழும்பில் அதிகம் செலவழிக்காமல் பார்க்க ஏராளம் உள்ளன.

  • காலிமுகத் திடல்: தெரு உணவுப் பொருட்களுடன் கடலில் சூரிய அஸ்தமன நடை – முற்றிலும் இலவசம்.
  • சுதந்திர சதுக்கம்: அழகான கட்டிடக்கலை மற்றும் அமைதியான, பரந்த, திறந்தவெளி.
  • கங்காராமய விகாரை: நவீன மற்றும் பாரம்பரிய வடிவமைப்புகளின் கலவையான விகாரை.
  • பெட்டா சந்தை: கொழும்பின் சுறுசுறுப்பான சந்தை. பார்ப்பதற்கும் புகைப்படம் எடுப்பதற்கும் சிறந்தது.

நினைவுப் பொருட்கள்

அதிக விலையுள்ள கடைத் தொகுதிகளைத் தவிர்க்கவும். மாறாக:

லக்சலா: நிலையான விலை, கைவினைப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய பொருட்களுக்கு ஏற்றது.

மேலதிக குறிப்புகள்

  • போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர் குடியுங்கள்: போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர் எப்போதும் பாதுகாப்பானது.
  • பயண காலம் (மே-அக்டோபர்): குறைவான சுற்றுலாப் பயணிகள், சிறந்த அனுபவம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன