வணக்கம் டுவஸ் தனியுரிமைக் கொள்கைக்கு வரவேற்கிறோம்.
வணக்கம் டுவஸ் என்பது உள்நாட்டுச்சுற்றுலா, வெளிநாட்டுச்சுற்றுலாத் துறைகளில் அனுபவம் உடைய சுற்றுலா முகவர், 297-1/1, ஜோர்ஜ் ஆர் டி சில்வா மாவத்தை, கொழும்பு 13 என்ற முகவரியில் அலுவலகத்தைக் கொண்டுள்ள, ஒரு நிறுவனம் ஆகும்.
உங்கள் தனியுரிமை எங்களுக்கு முக்கியம், உங்களைப் பற்றி நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தரவு அக்கறையுடன் கையாளப்படும் என்று உங்களுக்கு நாங்கள் உறுதியளிக்க விரும்புகிறோம். எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடுதல், பதிவு செய்தல், பணம் தொடர்பான சேவைகளை நீங்கள் பெறும்போது உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எப்படிக் கவனமாகப் பார்த்துக்கொள்கிறோம் என்பதைப் பற்றி இந்த தனியுரிமைக் கொள்கை தெரிவிக்கிறது, அதுமட்டுமின்றி உங்கள் தனியுரிமை சார்ந்த உரிமைகள் பற்றியும், சட்டம் உங்களை எப்படி பாதுகாக்கிறது என்பதைப் பற்றியும் கூறுகிறது.
இந்தத் தனியுமைக் கொள்கையானது பல வரையறைகளைப் பயன்படுத்துகிறது, அவை பின்வருமாறு:
சட்ட அல்லது ஒழுங்குமுறைக் கடமைக்கு இணங்குதல்: எங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஒரு சட்ட அல்லது ஒழுங்குமுறைக் கடமைக்கு இணங்குவதற்காக அவசியம் ஏற்படும்பட்சத்தில் உங்கள் தனிப்பட்ட தரவைச் செயலாக்குதல்.
நியாயமான நல நோக்கம்: உங்களுக்கு மிகச் சிறந்த சேவை/தயாரிப்பை வழங்குவதற்கும், மிகப் பாதுகாப்பான அனுபவத்தை வழங்குவதற்கும் எங்களுக்கு உதவிடும் வகையில் எங்கள் வணிகத்தை நடத்துதல் மற்றும் நிர்வகித்தலில் எங்களுக்கு உள்ள ஆர்வம். நியாயமான நல நோக்கங்களுக்காக உங்கள் தனிப்பட்டத் தரவை நாங்கள் செயலாக்குவதற்கு முன்பாக, சமநிலையின்மை அல்லது சாத்தியமுள்ள தாக்கங்கள் (நல்லவை கெட்டவை இரண்டும்) ஏதேனும் உங்களுக்கு ஏற்படுமா என்பதையும், உங்கள் உரிமைகள் பற்றியும் நாங்கள் கருத்தில் கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்கிறோம். எங்களுடைய நல நோக்கங்களை விட உங்கள் மீது ஏற்படக்கூடிய தாக்கத்தின் அளவு அதிகமாகும் பட்சத்தில் உங்களுடைய தனிப்பட்ட தரவை நாங்கள் பயன்படுத்த மாட்டோம் (உங்களிடமிருந்து ஒப்புதல் பெறாதபட்சத்தில் அல்லது சட்டத்தின்படி அவசியமாகாத பட்சத்தில், அல்லது சட்டத்தால் அனுமதிக்கப்படாத பட்சத்தில்).
ஒப்பந்தத்தைச் செயல்படுத்துதல்: நீங்கள் ஒரு தரப்பினராக இருக்கின்ற ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கு தேவையானபோது அல்லது அத்தகைய ஒப்பந்தத்திற்கு உடன்படும் முன்பு உங்கள் கோரிக்கையின்படி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு உங்கள் தனிப்பட்ட தரவைச் செயலாக்குதல்.
தனிப்பட்ட தரவு: குறிப்பிட்ட தகவல்களில் இருந்து மட்டுமே அல்லது நாங்கள் வைத்திருக்கின்ற அல்லது அநேகமாக எங்களால் அணுகமுடியக்கூடிய பிற அடையாளம் காட்டிகளையும் சேர்த்து நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு தனிநபரை அடையாளம் காட்டக்கூடிய வகையிலான அல்லது அந்த நபரை பற்றிய தகவல்களை அடையாளம் காட்டக்கூடிய எந்த ஒரு தகவலும் தனிப்பட்டத் தகவலாகும். பெயரில்லாதத் தரவு அல்லது ஒரு நபரின் அடையாளம் நிரந்தரமாக அகற்றப்பட்ட தரவு போன்றவை தனிப்பட்ட தரவு என்பதில் அடங்காது.
செயாலக்குதல் அல்லது செயலாக்கம்: தனிப்பட்ட தரவைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் செயல்கள். தரவைப் பெறுதல், பதிவு செய்தல், வைத்திருத்தல் அல்லது அத்தகைய தரவில் ஒழுங்கமைத்தல், திருத்தம் செய்தல், மீட்டெடுத்தல், பயன்படுத்துதல், வெளிப்படுத்துதல், அழித்தல் உள்ளிட்ட செயல்களைச் செய்தல். தனிப்பட்ட தரவை மூன்றாம் தரப்பினருக்கு அனுப்புதல் அல்லது பரிமாற்றம் செய்தலும் செயலாக்குதல் என்பதில் அடங்கும்.
தனிப்பட்ட தரவின் சிறப்பு வகைகள்: ஒரு நபரின் இனம் அல்லது பூர்வீகம், மத அல்லது தத்துவ நம்பிக்கை, பாலியல் வாழ்க்கை, பாலியல் நாட்டம், அரசியல் கருத்துகள், வர்த்தக சங்கத்தில் அவருடைய மெம்பர்ஷிப், உடல்நலம் அல்லது மரபியல் மற்றும் பயொமெட்ரிக் தரவு பற்றிய தகவல் போன்ற பாதுகாக்க வேண்டிய விஷயங்கள் பற்றிய விவரங்களை வெளிப்படுத்துகின்ற தரவு.
நாங்கள் உங்களைப் பற்றிய பல்வேறு வகையான தனிப்பட்ட தரவைச் சேகரிக்கலாம் பயன்படுத்தலாம் சேமித்து வைக்கலாம் மற்றும் பரிமாற்றலாம்.
இந்தத் தனியுரிமைக் கொள்கையின் உள்ளடக்கம் தொடர்பாக உங்களுக்குக் கருத்துக்கள், கேள்விகள், குறைகள் ஏதேனும் இருந்தால், முதல் நிகழ்விலேயே உங்கள் குறையைத் தீர்ப்பதற்கு எங்களால் உதவ முடிகிறதா என்பதைப் பார்ப்பதற்காக எங்களைத் தொடர்பு கொண்டு உங்கள் புகாரைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.