கொழும்பு நகரச் சுற்றுலா
கொழும்பு நகர சுற்றுப்பயணத்தில் கொழும்பு கலங்கரை விளக்கம், காலி முகத்திடல், யோர்க் தெரு (பிரித்தானிய காலனித்துவ கட்டிடக்கலை), கொம்பனித் தெரு பகுதி, பெய்ரா ஏரி, உலகப் போர் நினைவுச்சின்னம், பொது நூலகம், தேசிய அருங்காட்சியகம், தாமரைத் தடாக அரங்கு, விஹார மகாதேவிப் பூங்கா, கொழும்பு நகர மண்டபம் மற்றும் பல முக்கிய இடங்களைப் பார்வையிடலாம்.
Description
கொழும்பு நகர சுற்றுப்பயணத்தில் கொழும்பின் பார்வை, கொழும்பின் பாரம்பரியம் மற்றும் இரவில் கொழும்பு என மூன்று வகைகள் உள்ளன. இது நகரத்தின் மிக முக்கியமான இடங்களை உள்ளடக்கும். முக்கிய இடங்கள், வரலாற்று – தொல்பொருள் தளங்கள், நிலப்பரப்புகள், வானளாவிய கட்டிடங்கள், பல்பொருள் அங்காடிகள் கொண்ட நவீன முக்கிய பகுதிகள் ஆகியவற்றை இச்சுற்றுலா உள்ளடக்கியுள்ளது.
பார்வையிடும் இடங்களாக கொழும்பு கலங்கரை விளக்கம், காலி முகத்திடல், யோர்க் தெரு (பிரித்தானிய காலனித்துவ கட்டிடக்கலை), கொம்பனித் தெரு பகுதி, பெய்ரா ஏரி, உலகப் போர் நினைவுச்சின்னம், பொது நூலகம், தேசிய அருங்காட்சியகம், தாமரைத் தடாக அரங்கு, விஹார மகாதேவிப் பூங்கா, கொழும்பு நகர மண்டபம் மற்றும் பல முக்கிய அடையாளங்கள் அடங்கும். (பருவகால மாற்றங்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
இந்த சுற்றுப்பயணத்தில் தேசிய வழிகாட்டியின் நேரடி தமிழ் வர்ணனை, சிற்றுண்டி, தூய நீர், நுழைவு கட்டணம் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் ஒளிப்பட, காணொளி கட்டணங்களை உள்ளடக்கப்படவில்லை.
Additional information
நாடு |
இலங்கை |
---|---|
நாட்கள் |
1 |
Reviews
There are no reviews yet.